போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?


போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?
x
தினத்தந்தி 10 May 2022 6:25 PM GMT (Updated: 2022-05-10T23:55:12+05:30)

கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 
போக்குவரத்து நெரிசல்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பெரிய கடைத்தெரு சாலையையொட்டி அமைந்துள்ளது கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி அமைந்துள்ள சாலையின் 2 பக்கமும் அதிகளவில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசல் நீண்ட நேரம் நீடிப்பதால்  , கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பள்ளிக்குள் சென்று வருவதில் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.  
நிரந்தர தீர்வு
இதனால், பள்ளியில் படிக்கும் மாணவிகள் பள்ளிக்குள் தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. பள்ளி முடிந்து வெளியே செல்லும் போதும் தாமதமாகிறது. எனவே, பள்ளி மாணவிகள் நலன் கருதி பள்ளி அருகே தேவையற்ற வாகனங்கள் நிறுத்தப்படுவதை போலீசார் தடுத்து போக்குவரத்து நெருக்கடியை போக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story