பெண்ணாடம் அருகே பால்குட ஊர்வலம்


பெண்ணாடம் அருகே பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 10 May 2022 11:58 PM IST (Updated: 10 May 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே பால்குட ஊர்வலம்


பெண்ணாடம்

பெண்ணாடம் அருகே  சின்னகொசப்பள்ளம் கிராமத்தில் உள்ள பால முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்தி கடன் செலுத்தினர். முன்னதாக முத்துமாாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளாற்றங்கரையில் இருந்து மேளதாள இசையுடன் சக்தி கரகத்துடன் பக்தர்கள் பால்குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர்.

Next Story