ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
எஸ்.புதூர் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு எஸ்.புதூர் வட்டார தலைவர் பிராங்களின் தலைமை தாங்கினார், வட்டார செயலாளர் சண்முகம் கோரிக்கைகளை விளக்கி கூறினார். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.புதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆரம்பப்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.மேலும் தேவகோட்டையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தேவகோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தன்எழுச்சி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆசிரியர் கூட்டணி தலைவர் ராஜம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜோசப், வட்டார செயலாளர் ஆரோக்கியசாமி, வட்டார பொருளாளர் ஜோசப்பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் லதா தலைமை தாங்கினார்.மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் செல்வா, செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் ரோஸ் மாநிலத் துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினார்கள்.வட்டார செயலாளர் அருள்மொழி செல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் நன்றியுரை ஆற்றினார். இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story