வி.சி.க. பெயாில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா்கள் மீது நடவடிக்கை
வி.சி.க. பெயாில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
சங்கராபுரம்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் தலித்சந்திரன், சங்கராபுரம் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 6-ந்தேதி ஒரு அரசு அதிகாரியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயரை பயன்படுத்தி அடையாளம் தெரியாத சிலர் துண்டு பிரசுரம் போன்று சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவு வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story