சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழா
சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழா நடந்தது.
நீடாமங்கலம், மே.11-
நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் எழுந்தருளி உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழா நேற்று நடைபெற்றது. விழா நாட்களில் அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து வருகிறது. 9-ம் நாளான நேற்று காலை பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். மாலையில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தனர். தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு சாமுண்டீஸ்வரி அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஜெ.சத்தியசீலன், ஆய்வாளர் எஸ்.தமிழ்மணி, தக்கார் பி.எஸ்.கவியரசு மற்றும் பூவனூர் கிராம மக்கள் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story