பாலம் கட்டும் பணியை பேரூராட்சி தலைவர் ஆய்வு


பாலம் கட்டும் பணியை பேரூராட்சி தலைவர் ஆய்வு
x
தினத்தந்தி 10 May 2022 6:39 PM GMT (Updated: 2022-05-11T00:09:20+05:30)

அரகண்டநல்லூரில் பாலம் கட்டும் பணியை பேரூராட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் -விழுப்புரம் சாலையில் அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோவில் அருகே சுமார் ரூ.20 லட்சம் செலவில் பாலம் கட்டும் பணி கடந்த ஒரு மாதமாக தீவிரமாக  நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பாலப்பணியை  துரிதப்படுத்தும் வகையில் அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் அன்பு, அப்பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணியை விரைந்தும்,  தரமாகவும் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

Next Story