ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு


ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 11 May 2022 12:14 AM IST (Updated: 11 May 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

நன்னிலம்;
நன்னிலம் அருகே ஸ்கூட்டாில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை  பாலீசார் தேடி வருகிறார்கள். 
சங்கிலி பறிப்பு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பனங்காட்டான்குடி தமிழர் தெருவை சேர்ந்தவர் ரம்யா( வயது23). இவர் நன்னிலத்தில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். முடிகொண்டான் திருமலை ராஜன் ஆற்றுப்பாலம் அருகே ரம்யா சென்ற போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த, 2 மர்ம நபர்கள், ரம்யாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட ரம்யா தனது தங்க சங்கிலியை இறுக பிடித்துக்கொண்டார். 
வலைவீச்சு
ஆனால் பாதி சங்கிலியை மட்டும் மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டனர். அவர்கள் கையில் சுமார் 2 பவுன் சங்கிலி மட்டும் சிக்கியது. அந்த சங்கிலியுடன் அவர்கள் தப்பி சென்று விட்டனர். 
இதுகுறித்து ரம்யா நன்னிலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Next Story