மதுபாட்டில்கள் ஏற்றி சென்ற மினிவேன் கவிழ்ந்தது


மதுபாட்டில்கள் ஏற்றி சென்ற மினிவேன் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 10 May 2022 6:47 PM GMT (Updated: 2022-05-11T00:17:01+05:30)

மதுபாட்டில்கள் ஏற்றி சென்ற மினிவேன் கவிழ்ந்தது.

மதுரை, 
மதுரை மாவட்டம் சிலைமான் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபாட்டில்கள் ஏற்றிக்கொண்டு மினிவேன் ஒன்று ராமநாதபுரம் ரிங்ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அந்த மினிவேனை திருப்புவனம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 34) என்பவர் ஓட்டி வந்தார். திடீரென்று அந்த வேனின் பின்பக்க டயர் பஞ்சர் ஆனது. இதனால் மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. 
அப்போது மினிவேனில் இருந்து மதுபாட்டில்கள் அனைத்தும் சாலையில் விழுந்து உடைந்தது. இதனால் சாலையில் மதுபானம் ஆறுபோல ஓடியது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சிலைமான் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த ஆனந்தை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். அதில் தனியார் மதுபானக்கூடத்திற்கு டாஸ்மாக் குடோனில் இருந்து மது பாட்டில்களை ஏற்றி மதுரை நோக்கி வந்த போது இந்த விபத்து நடந்தது ெதரியவந்தது. 
மேலும் வேனில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 250 பெட்டிகளில் மது பாட்டில்கள் இருந்தன. அதில் எத்தனை பெட்டிகளில் உள்ள மது பாட்டில்கள் உடைந்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story