ஆள்மாறாட்டத்தில் பாட்டியை ெவட்டிக்கொன்ற வாலிபர்


ஆள்மாறாட்டத்தில் பாட்டியை ெவட்டிக்கொன்ற வாலிபர்
x
தினத்தந்தி 10 May 2022 6:58 PM GMT (Updated: 2022-05-11T00:28:45+05:30)

சித்தியை பழிவாங்குவதாக நினைத்து ஆள்மாறாட்டத்தில் பாட்டியை வெட்டிக்கொன்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

சாயல்குடி
சித்தியை பழிவாங்குவதாக நினைத்து ஆள்மாறாட்டத்தில் பாட்டியை வெட்டிக்கொன்ற வாலிபரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
வீட்டு திண்ணையில் தூங்கினார்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூர் கிராமத்தை சேர்ந்தவர், மாரியம்மாள் (வயது 75). இவரது கணவர் இறந்து விட்டதால் தனது மகன் மலையப்பன் வீட்டில் வசித்து வந்தார். 
நேற்று முன்தினம் இரவில் மாரியம்மாள் வீட்டின் திண்ணையில் படுத்து இருந்தார். நேற்று அதிகாலையில் அவரது அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து மலையப்பனின் மனைவி  கன்னியம்மாள் வெளியே வந்து பார்த்தார். அப்போது, ஒருவர் தப்பி ஓடியுள்ளார். அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து சாயல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரியம்மாள் உடலை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாசும் நேரில் விசாரணை மேற்கொண்டார். 
வெட்டிக்ெகாலை
போலீசார் விசாரணையில், மூதாட்டி மாரியம்மாளின் மகன் மலையப்பனுக்கு கன்னியம்மாள் 2-வது மனைவி ஆவார். அவரது முதல் மனைவிக்கு மணிமேகலை என்ற மகளும், மணிபாரதி (25) என்ற மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே மலையப்பனை பிரிந்து முதல் மனைவி தனது பிள்ளைகளுடன் தூத்துக்குடியில் வசித்து வருகிறார். 
2-வது மனைவி கன்னியம்மாளுக்கு குழந்தை இல்லை. மாரியூர் கிராமத்தில் மலையப்பன் பெயரில் வீட்டுமனை இருக்கிறதாம், அதனை முதல் மனைவி மகன் மணிபாரதி தனக்கு எழுதிக்கொடுக்கச் சொல்லி தந்தை மலையப்பனிடம், மாரியூர் கிராமத்திற்கு வந்து அடிக்கடி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மலையப்பன், சித்தி கன்னியம்மாள் மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்கள் மீது மணிபாரதி ஆத்திரத்தில் இருந்துள்ளார். ஆகையால் தனது சித்தி கன்னியம்மாள் வீட்டின் வெளியே படுத்து இருப்பதாக நினைத்து, அவரை பழிவாங்க வந்து ஆள்மாறாட்டத்தில் பாட்டியை வெட்டிவிட்டு மணிபாரதி தப்பிச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
 இந்த சம்பவம் ெதாடர்பாக சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிபாரதியை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் மணி பாரதியை பிடிப்பதற்காக தனிப்படை தூத்துக்குடி சென்றுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

Next Story