தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டம்


தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 7:03 PM GMT (Updated: 2022-05-11T00:33:11+05:30)

தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேவகோட்டை, 
தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சியில் 40-க்கும் மேற்பட்ட நகராட்சி தூய்மை பணியாளர்களும், 145 ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். 
தற்போது நகராட்சி விரிவடைந்து வரும் சூழலில் தூய்மை பணியாளர்களின் பணி நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும், மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயித்த ஊதியம் தற்போது வரை வழங்கப்பட்டு வருவதாகவும், விலைவாசி உயர்வால் துப்புரவு பணியாளர்கள் தங்களின் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத சூழ்நிலையில் உள்ளனர் என்றும், எனவே ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி நகராட்சி வாசலில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீர் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தை
ஏ.ஐ.டி.யூ.சி மாநில துணைத் தலைவர் மீனாள்சேதுராமன் தலைமை தாங்கினார். இதுகுறித்து தகவலறிந்த நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகராட்சி ஆணையாளர் அசோக் குமார், நகர் காவல்துறை ஆய்வாளர் சரவணன் ஆகியோர் நகராட்சிக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் சமரசம் ஏற்பட்டு தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

Next Story