அரசு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசு


அரசு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 11 May 2022 12:33 AM IST (Updated: 11 May 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் வழங்கினார்.

வெளிப்பாளையம்:
நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ராஜாராமன் தலைமை தாங்கினார்.வணிகவியல் துறைத் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.விழாவில் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கை யுடனும், ஆர்வத்துடனும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது படிப்பிற்கும், செய்திதாள்களை வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்றார். விழாவில் இந்திய கப்பற்படை லெப்டினன்ட் கமாண்டர் கர்மீந்தர்சிங் கலந்து கொண்டு பேசினார். ஆங்கிலத் துறை பேராசிரியர் உத்திராபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக கல்லூரியின் உடற்கல்வி ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசுவரன் வரவேற்றார். முடிவில் அருண்பிரசாத் நன்றி கூறினார்.

Next Story