11-ம் வகுப்பு பொதுத்தேர்வு
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.
மதுரை,
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நேற்று தொடங்கின. இந்த தேர்வுகள் வருகிற 31-ந் தேதி முடிவடைகிறது. மதுரை மாவட்டத்தில், இந்த தேர்வை 323 பள்ளிகளில் இருந்து 18,728 மாணவர்கள், 18,714 மாணவிகள் என 37,442 பேர் எழுதுகின்றனர். இதற்காக 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கண்பார்வையற்ற, செவித்திறன் குறைந்த மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதியுடன் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்றைய தேர்வை 188 பேர் எழுதினர். முதல்நாளான நேற்று தமிழ் மொழிப்பாடத்துக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வில், பள்ளிகளில் இருந்து எழுதும் மாணவ, மாணவிகளில் 1,574 பேர் தேர்வெழுத வரவில்லை. 387 தனித்தேர்வர்களில் 44 பேர் தேர்வெழுத வரவில்லை. மதுரை மத்திய சிறையில் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 11 பேரும் தேர்வெழுதினர்.
Related Tags :
Next Story