தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
சோளிங்கரில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி சார்பில் ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சோளிங்கர்
சோளிங்கரில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி சார்பில் ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சோளிங்கர் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் கவுதமன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எஸ்.குமார் வரவேற்றார். வட்டாரச் செயலாளர் மனோகுமார் கண்டன விளக்க உரையாற்றினார்.
அப்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார துணைச் செயலாளர் சாத்ராக் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story