கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கு காரணம் என்ன?
திருத்தங்கலில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
சிவகாசி,
திருத்தங்கலில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
டிரைவர்
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 32). டிரைவர். இவருடைய மனைவி சரஸ்வதி (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள்.
சரஸ்வதி அதே பகுதியில் உள்ள பட்டாசு மூலப்பொருளான குழாய்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் செந்தில்குமாருக்கும், பாண்டியன் நகரை சேர்ந்த முனியாண்டி (38) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் கிடைத்தது. பின்னர் 2 பேரும் குடும்ப நண்பர்களாக பழகி வந்தனர். இதற்கிடையில் முனியாண்டிக்கும், சரஸ்வதிக்கும் ெதாடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
2 பேர் தற்கொலை
இந்த பழக்கம் கடந்த சில வருடங்களாக தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. வேலிக்கு பயன்படுத்தப்படும் கல் தூண்களை விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்த முனியாண்டிக்கு மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி வீட்டிற்கு வந்த முனியாண்டி அங்கு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது அருகில் இருந்த சரஸ்வதியும் அதே அறையில் வேறு இடத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சரஸ்வதி, முனியாண்டியின் கள்ளக்காதல் இருகுடும்பத்துக்கும் தெரிய வந்ததால் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு காரணம் உண்டா? என திருத்தங்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story