கலைஞரின் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு சிறப்பு முனைப்பு முகாம்


கலைஞரின் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு சிறப்பு முனைப்பு முகாம்
x
தினத்தந்தி 10 May 2022 7:40 PM GMT (Updated: 10 May 2022 7:40 PM GMT)

இனுங்கூரில் கலைஞரின் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு சிறப்பு முனைப்பு முகாம் நடைபெற்றது.

நச்சலூர், 
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு சிறப்பு முனைப்பு முகாம் இனுங்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதற்கு இனுங்கூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாலு தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் முன்னிலை வகித்தார். முகாமில் நங்கவரம் துணை வேளாண்மை அலுவலர் கணேசன், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த திட்டத்தின் நோக்கம், அதன் செயல்பாடுகள், மானியத்திட்டங்கள், வேளாண் இடுபொருட்கள் வினியோகங்கள், உழவர் கடன் அட்டை பெறும் முறைகள், அதன் அவசியம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி நிதியுதவி திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.
இதேபோல் அரசு அதிகாரிகள் தங்கள் துறையின்  திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் இனுங்கூர் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story