சுண்ணாம்புக்கல் வெட்டி எடுப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்


சுண்ணாம்புக்கல் வெட்டி எடுப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 7:45 PM GMT (Updated: 10 May 2022 7:45 PM GMT)

சுண்ணாம்புக்கல் வெட்டி எடுப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

தரகம்பட்டி, 
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுண்ணாம்புக்கல் வெட்டி எடுப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் சிந்தாமணிபட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி லியாகத் தலைமை தாங்கினார். மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் ரவிச்சந்திரன், கடவூர் தாசில்தார் ராஜாமணி, குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடவூர் தாலுகா, வரவணை கிராமத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் வரவணை கிராமத்தில் தனியார் நிறுவனத்தில் சுண்ணாம்பு கற்களை வெட்டி எடுக்க சிலர் ஆதரவாகவும், பலர் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து அவர்களின் கருத்துகளை பதிவு செய்து கொண்ட அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் விவசாய சங்க பொருளாளர் ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள், தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story