பெயிண்டர் தற்கொலை


பெயிண்டர் தற்கொலை
x
தினத்தந்தி 10 May 2022 7:48 PM GMT (Updated: 2022-05-11T01:18:23+05:30)

பெயிண்டர் தற்கொலை

ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (43) பெயிண்டரான இவர் மதுபழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி பேஸ்ட் தின்று மயங்கி விழுந்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து  ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story