பல்கலைக்கழக அளவிலான டேக்வாண்டோ போட்டி
பல்கலைக்கழக அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.
கரூர்,
கரூர் தாந்தோன்றிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் பல்கலைக்கழக அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த 40 கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இப்போட்டி 46 கிலோ முதல் 90 கிலோ வரையிலான எடைப்பிரிவுகளில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கரூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி மற்றும் உடற்கல்வி துறை இயக்குனர் ராஜேந்திரன் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story