பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது


பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 10 May 2022 8:02 PM GMT (Updated: 10 May 2022 8:02 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 30 ஆயிரத்து 234 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

தஞ்சாவூர்
தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 5-ந் தேதி தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6-ந் தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்தநிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வு வருகிற 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இந்த தேர்வு 107 மையங்களில் நடைபெறுகிறது.‌
30,234 மாணவ, மாணவிகள்
இதில் 227 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 677 மாணவர்களும், 15 ஆயிரத்து 277 மாணவிகளும், 280 தனித்தேர்வர்களும் என மொத்தம் 30ஆயிரத்து 234 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 178 மாற்று திறனாளி மாணவர்களும் அடங்குவர். தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் கண்காணிக்க 150 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு ரோந்து வந்த வண்ணம் இருந்தனர்.
தேர்வு மையங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் குடிநீர் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. தேர்வு நடைபெற்றதையொட்டி தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.


Next Story