தமிழ்நாடு அறிவியல் இயக்க செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.
காளையார்கோவில்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஜீவானந்தம், துணைத்தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி வரவேற்றார். கூட்டத்தில் கலாம் விருது பெற்ற ஆசிரியர் சேவற்கொடியோன், அன்பாசிரியர் முத்துராமசாமி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து கவுரவ தலைவர் சாஸ்தா சுந்தரம் அறிமுக உரையாற்றினார். மாநில பொருளாளர் ஜீவானந்தம், செயற்குழு கூட்ட முடிவுகளை தொகுத்து வழங்கினார். மாநிலத் துணைதலைவர் முத்துலட்சுமி இயக்கத்திற்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில், சிவகங்கையில் நடைபெற்ற புத்தக திருவிழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் கல்வி, அறிவியல் பிரசாரம், அறிவியல் வெளியீடு, வளர்ச்சி, ஆரோக்கியம், சமம், துளிர் திறனறிதல் தேர்வு, வினாடி வினா, தேசிய குழந்தைகள் அறிவியல் ஆகியவற்றின் உபகுழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ரகுநாதன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story