சட்டக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


சட்டக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 10 May 2022 8:30 PM GMT (Updated: 2022-05-11T02:00:51+05:30)

நெல்லையில் சட்டக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.

நெல்லை:
நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 2000-2005-ம் கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது.
இதில் நீதிபதிகளாக இருக்கும் விவேகானந்தன், மாரியப்பன், அரசு வக்கீல்கள் சுரேஷ்பாபு, டீனா, பாலரேவதி, வக்கீல்கள் ஜோஸ் ஆனந்த், ஜெயராமன், சந்திரசேகர் உள்ளிட்ட வக்கீல்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
அவர்கள் கல்லூரியில் படித்த போது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் குழு புகைப்படங்களும் எடுத்து கொண்டனர்.

Next Story