மாவட்ட செய்திகள்

சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Load workers protest

சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மல்லூர் அருகே சந்தியூரில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பனமரத்துப்பட்டி, 
மல்லூர் அருகே சந்தியூரில் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் மாவட்ட அலுவலகம் மற்றும் டாஸ்மாக் குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த மதுபான பெட்டிகளை வாகனங்களில் ஏற்றி இறக்கும் பணிகளில் 50-க்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் குடோன் முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சுமைபணி தொழிலாளர் சங்க மாநில தலைவர் வெங்கடபதி தலைமை தாங்கினார்.  இதில் மதுபான பெட்டிகளை ஏற்றி இறக்க வழங்கப்படும் கூலி தொகை உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பணிபுரியும் இடத்தில் குடிநீர், முதலுதவி பெட்டி மற்றும் ட்ராலி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.