மூட்டா அமைப்பினர் போராட்டம்


மூட்டா அமைப்பினர் போராட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 2:35 AM IST (Updated: 11 May 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி மூட்டா அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.

நாகர்கோவில்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி மூட்டா அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.
தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி நாகர்கோவில் இந்து கல்லூரி முன் மூட்டா அமைப்பு சார்பில் வாயிற் முழக்க போராட்டம் நேற்று நடந்தது.
இதற்கு கிளை தலைவர் சுரேந்திரன் தலைமை தாங்கினார். தலைவர் ராதாகிருஷ்ணன் விளக்க உரையாற்றினார். நிர்வாகிகள் திருவாழிமார்பன், ராமசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் கிளைச் செயலாளர் மகேஷ் நன்றி கூறினார். போராட்டத்தில் பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story