ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது; 27 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 27 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 27 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
பிளஸ்-1 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 107 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 3 மையங்களில் தனித்தேர்வர்கள் தேர்வு எழுத ஒதுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை சந்திக்காத நிலையில் இந்த ஆண்டு முதல் முறையாக பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தேர்வு தொடங்குவதற்கு முன்பு வரை மாணவ-மாணவிகள் பலர் புத்தகங்களை படித்த வண்ணம் இருந்ததை காண முடிந்தது.
பறக்கும் படைகள்
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் தேர்வு தொடங்குவதற்கு முன்பு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் மாணவிகள் கலந்துகொண்டு தேர்வை சிறப்பாக எழுத வேண்டும் என்று தங்களது விருப்ப கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டார்கள். மாவட்டத்தில் தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வை எழுதினார்கள். தேர்வில் முறைகேடு ஏற்படுவதை தடுக்க மொத்தம் 220 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பறக்கும் படையினர் பல்வேறு தேர்வு மையங்களுக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினார்கள்.
Related Tags :
Next Story