தேவியாக்குறிச்சி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்


தேவியாக்குறிச்சி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
x
தினத்தந்தி 10 May 2022 10:44 PM GMT (Updated: 2022-05-11T04:14:36+05:30)

தேவியாக்குறிச்சி ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன.

தலைவாசல், 
தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று சுமார் 120 ஏக்கரில் உள்ளது. இந்த ஏரியில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இந்த ஏரியின் தண்ணீரை குடித்த 2 ஆடுகள் இறந்ததாகவும் தெரிகிறது. தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த ஏரிக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஏரி தண்ணீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே மீன்கள் செத்து மிதக்கும் ஏரியை, ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Next Story