கடை அருகே பிணமாக கிடந்த தொழிலாளி


கடை அருகே பிணமாக கிடந்த தொழிலாளி
x
தினத்தந்தி 11 May 2022 6:49 AM IST (Updated: 11 May 2022 6:49 AM IST)
t-max-icont-min-icon

கடை அருகே தொழிலாளி பிணமாக கிடந்தார்.

மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் பெரிய தெருவை சேர்ந்தவர் ராமர்(வயது 55). கூலி தொழிலாளி. நேற்று காலை காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள குமார் என்பவரது மளிகை கடையின் அருகே ராமர் விழுந்து கிடப்பதாக, அவரது மனைவி ராணிக்கு(48) தகவல் கிடைத்தது. இதையடுத்து தனது குழந்தைகளுடன் ராணி அங்கு சென்று பார்த்தபோது, ராமர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து, ராமரின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் ராமர் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story