தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி


தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
x
தினத்தந்தி 11 May 2022 10:21 AM GMT (Updated: 11 May 2022 10:21 AM GMT)

தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

காங்கயம், மே.12
சென்னை ராஜாஜி மருத்துவமனையில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அந்தந்த பகுதிக்குட்பட்ட தீயணைப்பு நிலையங்கள் சார்பாக தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்க வேண்டும் என்ற அறிவிக்கப்பட்டது. அதன்படி காங்கயம் தீயணைப்பு நிலையம் சார்பில் நேற்று காலை காங்கயம் அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி தீயணைப்பு வீரர்களால் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் மருத்துவமனைகளில் மின் கசிவு மற்றும் வேறு காரணங்களால் தீ விபத்து ஏற்படும் போது தீயணைப்பான் கருவி மூலம் எப்படி தீயை அணைப்பது மற்றும் நோயாளிகளை காப்பாற்றுவது எப்படி எனவும், இதுபோன்ற தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

---

Next Story