பழையகாயலில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பழையகாயல் கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
பழையகாயல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறியும், நிதி இழப்புகளை கண்டித்தும், அதற்கு பொறுப்பானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அவர்களிடமிருந்து உரிய பணத்தை வசூல் செய்ய வேண்டும் என்று கோரியும், தகுதியுள்ள பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கான கடன் தள்ளுபடியை வழங்க கோரியும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பழையகாயல் கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் தமிழ் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மா.மாரிச்செல்வம், துணை செயலாளர் அர்ஜூன், மாவட்ட மகளிரணி செயலாளர் செரினா பானு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story