ஆர்டிஓ அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகை


ஆர்டிஓ அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 May 2022 5:40 PM IST (Updated: 11 May 2022 5:40 PM IST)
t-max-icont-min-icon

ஆர்டிஓ அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகை

உடுமலை,
உடுமலையில் வக்கீல் ஒருவரை ஆர்.டி.ஓ., தரக்குறைவாக பேசியதாக கூறி ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் வக்கீல்கள் 2½ மணிநேரம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆர்.டி.ஓ.மீது குற்றச்சாட்டு
உடுமலையைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் சிவில் வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம்  மாலை உடுமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரை சந்திக்கசென்றுள்ளார்.அப்போது அங்கு உடுமலை ஆர்.டி.ஓ.கீதா இருந்துள்ளார்.அவர் அங்கிருந்த தாசில்தாரிடம் வக்கீலை பற்றிதரக்குறைவாக பேசியதாககூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து உடுமலை வக்கீல்கள் சங்கக்கூட்டம் நேற்று  நடந்தது. இந்த கூட்டத்தில், வக்கீலை தரக்குறைவாக பேசியதால் கலெக்டர் வந்து பேசும்வரை ஆர்.டி.ஓ.அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து வக்கீல்கள்,  ஆர்.டி.ஓ.அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.அப்போது ஆர்.டி.ஓ.கீதா தனது அறையில் உட்கார்ந்து பைல்களை பார்த்துக்அலுவலக பணிகளை மேற்கொண்டிருந்தார்.
முற்றுகைப்போராட்டம்
அப்போதுஆர்.டி.ஓ.வை சந்திக்க அலுவலக அறைக்குள் சென்ற வக்கீல்கள்  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முற்றுகைப்போராட்டம் காலை 11.30 மணிக்குதொடங்கியது. மதியம்1.15மணியளவில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய் பீம் ஆகியோர் ஆர்.டி.ஓ.அலுவலகத்திற்கு வந்து, வக்கீல்களிடமும் சமரசபேச்சுவார்த்தை நடத்தினர்.இதைத்தொடர்ந்து தனது அலுவலக அறைக்கு வந்த ஆர்.டி.ஓ.கீதா, வக்கீல்கள் முன்பு பேசினர்.இந்த சமரச பேச்சைத்தொடர்ந்து மதியம்2மணிக்கு, வக்கீல்கள் முற்றுகைப்போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story