‘ஏர்ஹாரன்’ பயன்படுத்திய 2 பஸ்களுக்கு அபராதம்
தினத்தந்தி 11 May 2022 6:34 PM IST (Updated: 11 May 2022 6:34 PM IST)
Text Sizeதிருவண்ணாமலையில் ஏர்ஹாரன் பயன்படுத்திய 2 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 தனியார் பஸ்களில் தடை செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பக்கூடிய ‘ஏர்ஹாரன்’ பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அலுவலர்கள் 2 பஸ்களிலும் பொருத்தப்பட்டிருந்த 3 ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பஸ்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire