தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்


தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 11 May 2022 1:45 PM GMT (Updated: 2022-05-11T19:15:37+05:30)

குண்டாறு அணை அருகே தோட்டத்தில் யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே குண்டாறு அணைப்பகுதிக்கு செல்லும் வழியில் மோட்டை சிறிய அணை உள்ளது. இந்த அணைப்பகுதி அருகில் உள்ள தோட்டத்தில் 4 யானைகள் புகுந்தது.

அங்கு இருந்த சுமார் 20 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி சேதப்படுத்தியது. மேலும் அங்கு இருந்த மாமரம், வாழைகளையும் நாசம் செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. பின்னர் யானைகள் காட்டுப்பகுதிக்கு சென்றுவிட்டது. 


Next Story