சிவகிரி நகர தி.மு.க. நிர்வாகிகள் தேர்வு


சிவகிரி நகர தி.மு.க. நிர்வாகிகள் தேர்வு
x
தினத்தந்தி 11 May 2022 2:10 PM GMT (Updated: 2022-05-11T19:40:34+05:30)

சிவகிரி நகர தி.மு.க. நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

சிவகிரி:

தென்காசி தி.மு.க. வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியம் சிவகிரி நகர 15-வது தி.மு.க. கட்சி தேர்தல் கடையநல்லூர் துர்கா மஹாலில் நடைபெற்றது.
தேர்தல் தலைமை கழக பிரதிநிதியும் தேர்தல் ஆணையாளருமான, தி.மு.க. நெசவாளர் அணி மாநில செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் செல்லத்துரை மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய கழக நிர்வாகிகள் முன்னிலையில் ஆணையாளர் மசுது, தேர்தலை நடத்தினார்.

இதில் சிவகிரி நகர தி.மு.க. செயலாளராக மீண்டும் டாக்டர் செண்பக விநாயகம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவைத்தலைவராக பேச்சாளர் துரைராஜ், துணைச் செயலாளராக முனியாண்டி (பொது), முத்தையா (ஆதிதிராவிடர்), ராமுத்தாய் (மகளிர்), பொருளாளராக பரமசிவன், மாவட்ட பிரதிநிதியாக மாரித்துரை, தங்கவேல், ஒன்றிய பிரதிநிதிகளாக மணி, மாடசாமி, அழகுவேல், இராமச்சந்திரன், சுந்தரவடிவேல், செயற்குழு உறுப்பினர்களாக மாரியப்பன், கந்தசாமி, இளையராஜா, ராமர், பாலசுந்தரி, இராஜேஸ்வரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டன.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகளுக்கு சால்வைகள் அணிவித்து வாழ்த்து பெற்றனர். புதிய நிர்வாகிகளை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.


Next Story