ஊட்டி புளூமவுண்டன் அணி வெற்றி


ஊட்டி புளூமவுண்டன் அணி வெற்றி
x
தினத்தந்தி 11 May 2022 2:15 PM GMT (Updated: 2022-05-11T19:45:58+05:30)

ஊட்டி புளூமவுண்டன் அணி வெற்றி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் சுரேஷ் நினைவு கோப்பைக்கான தலா 20 ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி, கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்துள்ள 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஊட்டியை சேர்ந்த புளூ மவுண்டன் வாரியர்ஸ் மற்றும் கேங்ஸ்டார் அணி பங்கு பெற்று விளையாடின. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த புளூமவுண்டன் வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தது.  இந்த அணி வீரர்கள் உதய் 87 ரன்களும், சிபி 49 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 120 பந்துகளில் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கேங்ஸ்டார் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த அணியை சேர்ந்த வீரர் சூர்யா அதிகபட்சமாக 32 ரன்களை எடுத்தார். புளூமவுண்டன் அணியின் பந்து வீச்சாளர் டிங்கு பிரசீத் 3 விக்ெகட்டுக்களை வீழ்த்தினார்.


Next Story