அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தர்ணா
அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தர்ணா
குன்னூர்
ஜெகதளாவில் பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதற்கு மன்ற தலைவர் பங்கஜம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், அடிப்படை வசதிகள் தொடர்பாக கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த பெண் கவுன்சிலர்களுக்கு, கூட்டத்தில் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், அவர்களது வார்டில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வரவில்ைல என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரும் களத்தில் இறங்கினர். இதையடுத்து அனைத்து கவுன்சிலர்களும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story