முதியவர் கொலையில் முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு


முதியவர் கொலையில் முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 May 2022 7:55 PM IST (Updated: 11 May 2022 7:55 PM IST)
t-max-icont-min-icon

தென்காசி முதியவர் கொலையில் முக்கிய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தென்காசி:

தென்காசி அருகே இலஞ்சி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோட்டை மாடன் (வயது 82). இவர் கடந்த 4-ந்தேதி தனது மாந்தோப்பில் மர்மநபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சொத்து தகராறில் கோட்டை மாடனை அவரது 3-வது மகள் ஸ்ரீதேவி கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது தெரிய வந்தது. 

இதுதொடர்பாக ஸ்ரீதேவி, அவருடைய மூத்த அக்காளான முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவி மைதீன்பாத்தின் கணவர் பரமசிவன், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த வசந்தகுமார், இலஞ்சியைச் சேர்ந்த மகேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் முக்கிய குற்றவாளியான இலஞ்சியைச் சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் சேகர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story