வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 11 May 2022 2:44 PM GMT (Updated: 2022-05-11T20:14:59+05:30)

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,  

‌திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த சிந்தலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மா (வயது 40). தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளராக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வள்ளியம்மா வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த 13 பவுன் நகைகள், ரூ.48 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story