எலுமிச்சை பழம் விலை உயர்வு
நத்தம் பகுதியில் வரத்து குறைவால் எலுமிச்சை பழம் விலை உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை ஆகிறது.
நத்தம்:
நத்தம், வத்திபட்டி, லிங்கவாடி, குட்டுப்பட்டி, பெரியமலையூர் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை பழம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்கள் சந்தைக்கு வரத்து அதிகமாக இருந்ததால் ரூ.10-க்கு 5 முதல் 7 பழம் வரை விற்கப்பட்டது. இந்த மே மாதம் தொடக்கத்தில் இருந்தே எலுமிச்சை பழம் வரத்து குறைந்து வருகிறது. இதனால் தற்போது சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.200-க்கு விற்பனையாகிறது. ஒரு பழம் ரூ.10 முதல் ரூ.15 வரை விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் வேம்பார்பட்டி கண்ணுமுகமதுவிடம் கேட்டபோது, பொதுவாக கோடைகாலம் வந்தாலே எலுமிச்சை பழம் விலை இரட்டிப்பாக விற்பது வழக்கம். ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சீசன் உள்ளது. ஆனால் இந்த மாதம் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்து வருகிறது. இனிவரும் மாதங்களில் பழத்தின் வரத்து அதிகரித்து, விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.
Related Tags :
Next Story