திருவள்ளூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 13-ந்தேதி நடக்கிறது


திருவள்ளூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 13-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 11 May 2022 3:22 PM GMT (Updated: 2022-05-11T20:52:38+05:30)

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்,  

தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story