குழாய் கிணறு, பண்ணைக்குட்டை அமைக்க 650 விவசாயிகளுக்கு அனுமதி


குழாய் கிணறு, பண்ணைக்குட்டை அமைக்க 650 விவசாயிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 11 May 2022 3:34 PM GMT (Updated: 11 May 2022 3:34 PM GMT)

திருப்பத்தூர், கந்திலி ஒன்றியங்களில் குழாய் கிணறு, பண்ணைக்குட்டை அமைக்க 650 விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பத்தூர், கந்திலி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆதியூர் மாடப்பள்ளி, எலவம்பட்டி, பெரியகண்ணலாப்பட்டி, கதிரிமங்கலம், கதிரம்பட்டி, குரிசிலாப்பட்டு உள்ளிட்ட 18 கிராம பஞ்சாயத்துகளில் வேளாண் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

முகாமிற்கு வேளாண்மை துறை இணை இயக்குனர் ராஜசேகர் தலைமை தாங்கினார். முகாமில் விவசாயிகள் கலந்துகொண்டு மனு கொடுத்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, கலந்துகொண்டு ஆழ்துளை கிணறு அல்லது குழாய் கிணறு, பண்ணைக்குட்டை அமைக்க, 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட் அமைக்க 650 விவசாயிகள் மனு அளித்தனர்.

நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் ராகினி, வேளாண்மை அலுவலர்கள் தாரணி, ஸ்விஸ்திகா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்.மணிமேகலை ஆனந்தகுமார், கோமதி கார்த்திகேயன், சரஸ்வதி ஜெயக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர்கள் அண்ணாமலை, கோபி நன்றி கூறினர்.

Next Story