மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு


மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 11 May 2022 9:12 PM IST (Updated: 11 May 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

சாலையை கடக்க முயன்றபோது, ேமாட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி தெற்குதெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவர், தேவதானப்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி நாச்சியம்மாள் (வயது 62). தினமும் இவர், தனது கணவருக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுப்பது வழக்கம். 

அதன்படி நேற்று தோப்புக்கு செல்வதற்காக புறவழிச்சாலையை நாச்சியம்மாள் கடக்க முயன்றார்.

அப்போது பெரியகுளத்தில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், நாச்சியம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேவதானப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே நாச்சியம்மாள் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பெரிய குளத்தை சேர்ந்த சிங்கராஜா (வயது 23) என்பவர் மீது, தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story