குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2022 4:00 PM GMT (Updated: 2022-05-11T21:30:18+05:30)

குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

பெருமாநல்லூர்
பெருமாநல்லூரில் பயணிகள் ஆட்டோ ஓட்டி வருபவர் வேல்முருகன்  48. இவர் சம்பவத்தன்று குன்னத்தூர் சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த மர்ம ஆசாமிகள் வேல்முருகனிடம் முகவரி கேட்பது போல் நடித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருக்கும் பணத்தை தருமாறு கேட்டுள்ளனர். அப்போது வேல்முருகன் சத்தம் போடவே, மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து  வேல்முருகன் பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார் 24, ஈஸ்வரன் 38, முத்துக்குமார் 29 சரவணன் 22 ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 4 பேரையும்  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி  4 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story