காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் சாலை விழிப்புணர்வு கருத்தரங்கு
காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் சாலை விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் சாலை விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இதற்கு தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கீதா வரவேற்று பேசினார். தமிழ் துறை தலைவர் செந்தில்குமார், இயற்பியல் துறை தலைவர் ஜெயசீலன், கணினி அறிவியல் பயன்பாட்டு துறை தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில், மாணவிகள் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஓட்டுனர் உரிமம் பெறுவதுடன் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை பாதுகாப்பாக ஓட்ட வேண்டும். செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது. பஸ்களில் மாணவிகள் நடு புறத்தில் சென்று பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். மாணவிகள் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும். சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. சாலை பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு பதில் கூறிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் மாணவி இளவரசி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story