அரூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.90 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்


அரூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.90 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
x
தினத்தந்தி 11 May 2022 9:46 PM IST (Updated: 11 May 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

அரூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.90 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது.

அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூரில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் மஞ்சள், பருத்தி ஆகியவை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த சங்கத்திற்கு அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 2,100 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர். சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் மஞ்சளை ஏலம் எடுத்தனர். இந்த விற்பனை சங்கத்தில் ரூ.90 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது. மஞ்சள் விரலி ரூ.6,102 முதல் ரூ.8,642-க்கும், குண்டு (கிழங்கு) மஞ்சள் குவிண்டால் ரூ.5,809 முதல் ரூ.7,269 வரையிலும் விற்பனையானது. 

Next Story