தடங்கம் கிராமத்தில் குற்றங்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம்


தடங்கம் கிராமத்தில்  குற்றங்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 4:17 PM GMT (Updated: 2022-05-11T21:47:06+05:30)

தடங்கம் கிராமத்தில் காவல் துறை சார்பில் குற்றங்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே தடங்கம் கிராமத்தில் காவல்துறை சார்பில் குற்றங்களை தடுப்பது குறித்து பொதுமக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதியமான்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன், கிராம வளர்ச்சி குழு தலைவர் முருகன், தி.மு.க. நிர்வாகி சேட்டு மற்றும் பொதுமக்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் வீடுகளை திறந்த வைத்துவிட்டு நடமாடுவதை  தவிர்க்க வேண்டும். ஆன்மிகம் மற்றும் சுற்றுலா செல்பவர்கள் வீட்டை பூட்டி விட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கிராமப்புறங்களில் குழந்தை திருமணங்கள் குறித்து தகவல் தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க தெருக்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறினர்.

Next Story