பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி திருவாரூரில், அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி திருவாரூரில், அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 6:45 PM GMT (Updated: 11 May 2022 4:42 PM GMT)

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி திருவாரூரில் அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்:-

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி திருவாரூரில் அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி நிறுத்திவைத்த ஈட்டிய விடுப்பு பணப்பயனை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்தமுறை, தினக்கூலி, சிறப்பு காலமுறை போன்றவற்றில் பணிபுரியும் பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும். 
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

கோஷங்கள்

அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பூபதி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜா முன்னிலை வகித்தார். இதில் மாநில பிரசார செயலாளர் சத்தியமூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை பணியாளர் சங்க மாநில தணிக்கையாளர் தேவராஜன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட நிர்வாகிகள் ராஜ்குமார், கார்த்திகேயன், ரமா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Next Story