சிதம்பரம் தபால் நிலையத்தில் கணினி திருட்டு


சிதம்பரம் தபால் நிலையத்தில் கணினி திருட்டு
x
தினத்தந்தி 11 May 2022 10:15 PM IST (Updated: 11 May 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் தபால் நிலையத்தில் கணினி திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம், 

சிதம்பரம் கச்சேரி தெரு, பழைய நீதிமன்றம் அருகே தபால் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் மணிவேல்(வயது 48) என்பவர், கடந்த 27.3.20 அன்று தபால் அலுவலகத்தை திறக்க வந்தபோது அலுவலகத்தின் கதவுகள் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த கம்ப்யூட்டர், ஸ்கேனர், உள்ளிட்ட பொருட்களை யாரோ மர்ம நபர் திருடிச்சென்று விட்டார். இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவம் நடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கண்காணிப்பாளர் மணிவேல் சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிதம்பர நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story