அழகுகலை நிபுணரிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய போலீஸ்காரர்


அழகுகலை நிபுணரிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய போலீஸ்காரர்
x
அழகுகலை நிபுணரிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய போலீஸ்காரர்
தினத்தந்தி 11 May 2022 10:24 PM IST (Updated: 11 May 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

அழகுகலை நிபுணரிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய போலீஸ்காரர்

போத்தனூர்

கோவையில் திருமணமானதை மறைத்துஅழகு கலை நிபுணரிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையை அடுத்த கோவைப்புதூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 26 வயதான பெண் குனியமுத்தூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனக்கு திருமணமாகி குழந்தைகள் மற்றும் கணவர் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறேன். நான் திருப்பூரில் அழகுகலை நிபுணராக வேலை செய்து வருகிறேன். இந்த நிலையில் கோவைப்புதூரில் உள்ள 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் ரவி (32) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
பின்னர் அது காதலாக மாறியது. நாங்கள் 2 பேரும் பல இடங்களுக்கு சுற்றினோம். அத்துடன் தனியாக வாடகைக்கு எடுத்து ஒரே வீட்டில் தங்கினோம். அப்போது அவர் எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. நான் உன்னைதான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி என்னுடன் உல்லாசம் அனுபவித்தார்.

இந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பது எனக்கு தெரியவந்தது. இது குறித்து நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்தார். இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று குடித்து வீட்டுக்கு வந்த அவர், என்னை தாக்கிவிட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை.
நான் பலமுறை அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவர் எடுத்து பேசவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நான் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றேன். என்னை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

எனவே தனக்கு திருமணமானதை மறைத்து என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த போலீஸ்காரர் ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் ரவி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story