ஓசூரில் 8 இடங்களில் ம.தி.மு.க. கொடியேற்று விழா
ஓசூரில் 8 இடங்களில் ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.
ஓசூர்:
ம.தி.மு.க. 29-வது ஆண்டு விழாவையொட்டி கொடியேற்று விழா ஓசூரில் 8 இடங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளுக்கு ஓசூர் நகர ம.தி.மு.க. பொறுப்பாளர் ஈழம் குமரேசன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் நவமணி, பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன், ஒன்றிய செயலாளர் அப்பையா, யோகநாதன், அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஞானசேகரன் வரவேற்றார். தீர்மானக்குழு செயலாளர் மணிவேந்தன் கொடியேற்றி வைத்து பேசினார். தொடர்ந்து, ஓசூர் வசந்த் நகரில் எழுச்சி நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தின்போது உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மணிவேந்தன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் இளங்கோ ஆகியோர் வழங்கினர். நிழ்ச்சிகளை ஸ்டீபன் தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் ஓசூர்-பெங்களூரு மெட்ரோ ரெயில் சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சுரேஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story