தேன்கனிக்கோட்டை தாலுகாவில் 12 நாட்டுத்துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு
தேன்கனிக்கோட்டை தாலுகாவில் 12 நாட்டுத்துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைக்கப்பட்டன.
ராயக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா அறிவுறுத்தி இருந்தார். அதன்பேரில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்போர் அவற்றை போலீசாரிடம் ஒப்படைத்து வருகின்றனர். தளி போலீசில் தேவர்பெட்டா கிராமத்தை சேர்ந்த மல்லேஷ் (வயது 40), லகுமா (40) ஆகியோர் தாங்கள் வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியை ஒப்படைத்தனர். இதேபோல் ராயக்கோட்டை போலீசில் 5 நாட்டுத்துப்பாக்கிகள் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதேபோல் கெலமங்கலத்தில் 2 நாட்டுத்துப்பாக்கிகளும், உத்தனப்பள்ளியில் 3 நாட்டுத்துப்பாக்கிகளும் போலீசில் ஒப்படைக்கப்பட்டன.
Related Tags :
Next Story