மாவட்ட செய்திகள்

லாரி மோதி 43 ஆடுகள் இறந்தன + "||" + 43 sheep died when Larry collided

லாரி மோதி 43 ஆடுகள் இறந்தன

லாரி மோதி 43 ஆடுகள் இறந்தன
லாரி மோதி 43 ஆடுகள் இறந்தன
எட்டிமடை

சூலூரை அடுத்த கலங்கல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது54) விவசாயி. இவர் சுமார் 400-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இவரது ஆடுகளை உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல சூலூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (38), ஆறுமுகம் (48), முத்து (55) ஆகியோர் வேலைக்கு இருந்தனர். இந்த நிலையில் இந்த 3 பேரும் ஆடுகளை கேரளா பகுதியில் உள்ள கோழி பாறை வரை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றனர். பின்னர் ஆடுகளை அவர்கள் மீண்டும் சூலூருக்கு கொண்டு வருவதற்காக ஓட்டி வந்தனர். 

நேற்று அதிகாலை கேரள-கோவை பைபாஸ் சாலையில் ஆடுகளை ஓட்டி வந்த போது கோவையிலிருந்து இரும்புக் கம்பிகளை ஏற்றிக்கொண்டு ஒரு கனரக லாரி  கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் நடந்து  சென்றுகொண்டிருந்த ஆடுகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 43 ஆடுகள் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்தன. 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆடுகளை ஓட்டி வந்தவர்கள் இதுகுறித்து க.க. சாவடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே மதுக்கரை இன்ஸ்பெக்டர் வைரம், க.க. சாவடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் லாரியை ஓட்டிவந்த கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த் முகமது (45) என்பவர் சிக்கினார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேய்ச்சலுக்கு சென்று விட்டு திரும்பிய போது ஆடுகள் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.